அது என்ன சரக்கு ப்ரோ? அஜித்தின் அந்த வீடியோவை கேலி செய்த நெட்டிசன்! ஒத்தவார்த்தையால் நெத்தியடி பதிலடி கொடுத்த பிரபலம்!
தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பற
தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் அஜித். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தல அஜித் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் பிளாக்பஸ்டர் கொடுத்த திரைப்படம் மங்காத்தா. மேலும் இப்படம் வசூல் சாதனையும் படைத்தது.
மங்காத்தா படத்தில் அர்ஜுன், திரிஷா, லட்சுமிராய், அஞ்சலி, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மங்காத்தா படத்தில் இடம்பெற்ற Blooper வீடியோக்கள் படத்தின் இறுதியில் காண்பிக்கப்பட்டது. அதில் போலீஸ் அதிகாரிகள் அனைவரும் ஒன்றாக புகைப்படம் எடுக்கும்போது அஜித் ஜாலியாக டான்ஸ் ஆடி சல்யூட் அடிப்பார். அவர் அருகில் நடிகர் அர்ஜுன் இருப்பார்.
இந்த நிலையில் அந்த ப்ளூப்பர் வீடியோவை இணையத்தில் பகிர்ந்த நெட்டிசன் ஒருவர், வெங்கட்பிரபு ப்ரோ என்ன சரக்கு அது? என கமெண்ட் செய்திருந்தார். அதற்கு இயக்குனர் வெங்கட்பிரபு, அது அன்பு என்ற சரக்கு ப்ரோ என பதிலளித்து அதனை மை டியர் தல என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்துள்ளார். இதற்கு தல ரசிகர்கள் செருப்படி பதில் என கமெண்ட் செய்து வருகின்றனர்.