"அநியாயம் பண்ணாதீங்க" விஜய் ரசிகர்களால் கடுப்பான வெங்கட் பிரபு.!?
அநியாயம் பண்ணாதீங்க விஜய் ரசிகர்களால் கடுப்பான வெங்கட் பிரபு.!?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் விஜய். இவர் 90களின் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை திரைத்துறையில் தொடர்ந்து நடித்து இளைய தளபதி என்று பெயர் பெற்றுள்ளார். தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்த விஜய் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியிருக்கிறார்.
இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தற்போது கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ரஷ்யா, சென்னை, கேரளா, ஹைதராபாத் என பல இடங்களில் நடைபெற்று வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ஏப்ரல் 4ஆம் தேதி மாஸ்கோ செல்லவிருப்பதாக படக்குழு தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகி உள்ளது.
இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களில் வெங்கட் பிரபுவிடம் கோட் படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் தொல்லை செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட கெட்ட வார்த்தையில் பேசி வெங்கட் பிரபுவிடம் அப்டேட் கேட்ட ரசிகரை குறித்து பதிவு வெளியிட்டிருந்தார். தற்போது மீண்டும் ரசிகர்கள் தொல்லை செய்யவே வெங்கட் பிரபு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "அநியாயம் பண்ணாதீங்க, சூப்பரான அப்டேட் விரைவில் வரும்" என்று கூறியிருக்கிறார். இப்பதிவு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.