பிரபல நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி என்னவானார்? அவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?
Venniradai moorthy current status
சினிமாவில் நிறைந்த இடம் என்பது எந்த ஒரு நடிகர், நடிகைக்கும் கிடைக்காத ஓன்று. ஒருசில படங்களிலையே பிரபலமாகி காணபோனவர்களும் உண்டு, நீண்ட வருடங்கள் இருந்தாலும் புது முக நடிகர்களின் வருகையால் பழைய நடிகர்கள் மார்க்கெட் இழப்பதும் வழக்கமான ஒன்றுதான்.
அந்த வகையில் 80, 90 களில் தமிழ் சினிமாவை கலக்கிய பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. வழக்கறிஞரான இவர் நடிகர், கதை ஆசிரியர், சின்னத்திரை இயக்குனர், ஜோசியர் என பல திறமைகளை கொண்டவர். மேலும், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த மிகப்பெரிய நடிகர்.
தற்போது இவருக்கு 83 வயதாகிறது. கடைசியாக வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் நடித்திருந்தார் வெண்ணிற ஆடை மூர்த்தி. சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி உள்ளார்.