விடாமுயற்சி படத்தின் முக்கிய அப்டேட்.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!
விடாமுயற்சி படத்தின் முக்கிய அப்டேட்.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!
லைகா ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர்கள் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ், நிகில் நாயர், தசரதி, கணேஷ் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி (Vidaamuyarchi). 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. படத்தின் இசையமைப்பு பணிகளை அனிரூத் ரவிச்சந்தரும், ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ், நீரவ் ஷாவும் மேற்கொண்டுள்ளனர். எடிட்டிங் பணிகளை என்.பி ஸ்ரீகாந்த் கையாண்டுள்ளார்.
ஓடிடி, டிவி வெளியீடு உரிமை
பலகோடி பொருட்செலவில் எடுக்கப்படும் விடாமுயற்சி திரைப்படம், நெட்பிளிக்ஸ் நிறுவனத்தால் ரூ.100 கோடி கொடுத்து ஓடிடி உரிமையை பெற்றுள்ளது. சன் தொலைக்காட்சி நிறுவனம் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையையும் கைப்பற்றி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளில் படம் வெளியாகிறது. தமிழ்நாட்டில் படம் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது.
இதையும் படிங்க: #Breaking: நடிகர் அஜித் குமார் பயணித்த கார் விபத்து; அதிஷ்டவசமாக உயிர்தப்பிய தல.. ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு.!
சச்சைக்குரிய வார்த்தைகள் நீக்கம்
படம் வெளியீடு தள்ளிப்போனாலும், அதன் எதிர்பார்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து இருக்கின்றன. இதனிடையே, படத்திற்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது. படத்தில் இடம்பெற்ற சில சர்ச்சைக்குரிய வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டுள்ளன. படம் 150 நிமிடம் 46 நொடிகள் (2 மணிநேரம் 30 நிமிடங்கள்) பதிவு செய்யப்பட்டுள்ளது. படத்தின் கதையை பொறுத்தமட்டில், வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜோடி சந்திக்கும் பிரச்சனை மற்றும் அதில் இருந்து தப்பிப்பது தொடர்பான காட்சிகள் கதையாக உள்ளதாக தெரியவருகிறது.
இதையும் படிங்க: திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!