விடாமுயற்சி படத்தின் அசத்தல் அப்டேட் கொடுத்த அஜித் நண்பர்.. வைரல் பதிவு!
விடாமுயற்சி படத்தின் அசத்தல் அப்டேட் கொடுத்த அஜித் நண்பர்.. வைரல் பதிவு!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.
மேலும், இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும், வில்லன் கதாபாத்திரத்தில் ஆக்சன் கிங் அர்ஜுனன் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ரெஜினா மற்றும் ஆரவ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அஜித்தின் நண்பரும், செய்தி தொடர்பாளருமான சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வெளிநாட்டில் முக்கியமான காட்சிகள் எடுக்க முடிக்கப்பட்டுள்ளதால், மீதமுள்ள காட்சிகள் தமிழ்நாட்டில் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அடுத்த கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி மாத முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.