திரிஷாவை கடுப்பேற்றும் விடாமுயற்சி படக்குழு.. இது தான் காரணமா?
திரிஷாவை கடுப்பேற்றும் விடாமுயற்சி படக்குழு.. இது தான் காரணமா?
தமிழ் சினிமாவில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான ஜோடி திரைப்படத்தில் சிம்ரனுக்குத் தோழியாக ஒரு சிறிய கதாப்பாத்திரத்தின் மூலம் அறிமுகமானார் த்ரிஷா. இதையடுத்து 2002ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
இந்த நிலையில் தற்போது இவர் கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ளார்.
இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் முடிவடைந்த நிலையில், தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக இடத்தை தேர்வு செய்து வருகின்றனர். இதனால் விடாமுயற்சி படக்குழு திரிஷாவை மிகவும் டென்ஷனாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஏனென்றால் நடிகை திரிஷா விடா முயற்சி படத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிட்டு மற்ற திரைப்படங்களில் நடிக்க முடியாமல் தவித்து வருகிறார். விடாமுயற்சி பட குழுவினரும் திரிஷாவை விடாமல் லொகேஷன் தேடி வருகிறோம் காத்திருங்கள் என கூறி வருகிறார்களாம்.
இதனால் திரிஷா கமிட்டாகியுள்ள மற்ற படங்களுக்கு நடிக்க நடிக்க முடியவில்லை. எப்படியாவது விடாமுயற்சி படத்தில் சீக்கிரம் அடித்து முடித்துவிட்டு அடுத்த படத்திற்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.