நடிகை மீனாவுக்கு அவரது கணவர் வித்யாசாகர் கொடுத்த முதல் பரிசு! அசந்து நின்ற நடிகை மீனா!!
நடிகை மீனாவுக்கு அவரது கணவர் வித்யாசாகர் கொடுத்த முதல் பரிசு! அசந்து நின்ற நடிகை மீனா!!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை மீனா. இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. நடிகை மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு சாப்ட்வேர் இன்ஜினியரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகா விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி பிரபலமாகியுள்ளார். இந்த நிலையில் நுரையீரல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார்.
இவரது மறைவு நடிகை மீனாவை நிலைகுலைய வைத்துள்ளது. இந்த நிலையில் அவர்கள் தொடர்பான பல நினைவுகளை ரசிகர்கள் மீட்டு பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் வித்யாசாகர் முதன்முதலாக நடிகை மீனாவை பார்க்க வந்தபோது கொடுத்த பரிசு குறித்து மீனா பேட்டி ஒன்றில் கூறியது வைரலாகி வருகிறது.
அதில் ஆபீஸ் வேலையாக சீனா சென்ற வித்யாசாகர் அங்கிருந்து நேராக மீனாவை பார்க்க சென்னை வந்துள்ளாராம். அப்பொழுது நடிகை மீனாவுக்கு ரொம்ப பிடிக்குமென ஒரு பை முழுவதும் சாக்லேட் வாங்கி வந்து பரிசாக கொடுத்தாராம். அப்பொழுதுதான் திருமணம் பேசிக்கொண்டிருந்த நிலையில் வித்யாசாகர் தனக்காக செய்வதை கண்டு மீனா அசந்துவிட்டாராம்.