அடேங்கப்பா!! விஞ்ஞானியான பிரபல இளம் நடிகை!! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ..
அடேங்கப்பா.. சூப்பர்..விஞ்ஞானியான பிரபல இளம் நடிகை...! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ..
சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை வித்யா பிரதீப். நாயகி சீரியலில் இவரது திறமையான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் இவருக்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது.
கேரளா மாநிலம் ஆலப்புழாவில் பிறந்து வளர்த்த இவர் சீரியலில் நடிப்பதற்கு முன் சைவம், பசங்க 2 போன்ற சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் இவர், தற்போது தான் டாக்டர் பட்டம் பெற்றுள்ளதை மகிழ்ச்சியாகவும் மிகவும் பெருமையாகவும் புகைப்படத்துடன் இணையத்தில் ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
மேலும் நடிகை வித்யா பிரதீப் கூறுகையில், கடந்த பத்து வருடங்களாக சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் பணியாற்றி வந்ததாகவும், அவர் சென்னைக்கு எந்த காரணத்திற்காக வந்தேனோ அது நிறைவேறிவிட்டது எனவும் கூறியுள்ளார். மேலும் இதற்காக கடின உழைப்பு தீர்மானம் ஆகியவற்றை கொடுத்ததுடன் சில தியாகங்களையும் நான் செய்து தற்போது விஞ்ஞானியாகவும் ஆகிவிட்டேன். இப்படி ஒரு இடத்திற்கு வந்திருப்பதன் மூலம் எனக்கான பொறுப்பு இன்னும் அதிகரித்து இருப்பதாக உணர்கிறேன். எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அறிவியலுக்கும் இந்த சமூகத்திற்கும் பயன்படும் வகையில் பணியாற்றுவேன் என்று வித்யா பிரதீப் கூறியுள்ளார்.
வித்யா பிரதீப் ஸ்டெம் செல் பயாலஜியில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளது அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, திரையுலகினருக்கும் மகிழ்ச்சியான செய்தியாகவே இருக்கின்றது.