என்னது.. தளபதி 65ல் விஜய்க்கு வில்லன் இந்த பிரபல நடிகரா! அவரே போட்டுடைத்த உண்மை!!
மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் திலிப் குமார
மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்
மேலும் தளபதி 65 படத்தில் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இந்த நிலையில் தளபதி 65 படத்தில் பாலிவுட் நடிகர் வித்யூத் ஜமால் வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் பரவி வந்தது. இவர் ஏற்கனவே துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார்.
ஆனால் இதற்கு நடிகர் வித்யூத் ஜமால் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த தகவல் பொய்யானது. ஆனால் அதை விரும்புகிறேன். நான் காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.