நயன்தாராவிற்கு வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்.. என்ன காரணம் தெரியுமா.?
நயன்தாராவிற்கு வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்.. என்ன காரணம் தெரியுமா.?
கோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து வருகிறார். தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் நயன்தாரா.
நயன்தாரா முதன் முதலில் 'ஐயா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின் ரஜினி நடித்த 'சந்திரமுகி' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். மேலும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு கதாநாயகியாக நடித்திருக்கிறார் நயன்தாரா.
கடந்த வருடம் நயன்தாராவிற்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனிற்க்கும் காதல் திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்தில் பல திரைத்துறை பிரபலங்களும், குடும்பங்களும் கலந்து கொண்டனர். மேலும் நயன்தாரா வாடகை தாய் முறை மூலம் இரு ஆண் குழந்தைக்கு தாயானார்.
இது போன்ற நிலையில், நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவு பெற்றுவிட்டது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பதிவு செய்து நயன்தாராவிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். மேலும் தனது இரு குழந்தைகளுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.