×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நயன்தாராவை இழிவாக பேசிய ராதாரவிக்கு எதிராக பொங்கிய விக்னேஷ் சிவன்! ட்விட்டரில் அதிரடி

Vignesh sivan slams radharavi on nayanthara

Advertisement

நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடந்தது. அதில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் நயன்தாரா பற்றி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"நயன்தாரா நல்ல நடிகை. இவ்ளோ நாள் தம் கற்றதே பெரிய விஷயம். அவங்களை பற்றி வராத (தப்பான) செய்தியெல்லாம் இல்லை. அதையும் தாண்டி நிக்கிறாங்க. தமிழ்நாட்டு மக்கள் எல்லாத்தையும் 4 நாளுக்கு தான் ஞாபகம் வெச்சுப்பாங்க. அப்புறம் விட்ருவாங்க. நயன்தாரா பேயாகவும் நடிக்கிறாங்க, சீதாவாகவும் நடிக்கிறாங்க. அப்போலாம் கடவுளாக நடிங்க கே.ஆர்.விஜயா போன்றவர்களை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேணும்னாலும் நடிக்கலாம். பார்த்தவுடனே கும்பிடறவங்களையும் போடலாமா, பார்த்தஉடனே கூப்பிடுறவங்களையும் போடலாம்" என ராதாரவி கூறியுள்ளார். 

நயன்தரா பார்த்தவுடன் கூப்பிடுகிறவர் போல இருக்கிறாரா? என ராதாரவிக்கு எதிராக கேள்விகேட்டு சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் ராதாரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாடகி சின்மயி கேட்டுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து தனது பங்கிற்கு தன்னுடைய ஆதங்கத்தை, நயன்தாராவுடன் தற்போது நெருக்கமாக இருந்து வரும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில், "திரைபிரபல குடும்பத்திலிருந்து வந்தவர், அறிவில்லாமல் தனது சுய விளம்பரத்திற்காக இவ்வாறு தரக்குறைவாக பேசுவதை இங்கு யாரும் கண்டிக்க மாட்டார்கள். அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை. இந்த அறுவறுப்பான பேச்சுகளுக்கு ரசிகர்கள் கைதட்டி பாராட்டுவதை பார்ப்பதற்கு மிகவும் கவலையாக இருக்கிறது. 

படம் இன்னும் முழுமையாடையாத நிலையில் இந்த நிகழ்ச்சி ஏன் நடந்தது என்பது குறித்து தெரியவில்லை. இதைபோன்ற வேலையில்லாதவர்கள் கண்டதையும் உளறுவதற்க்காக தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதா! படத்தை விளம்பரம் செய்ய இப்படியா தேவையில்லாத நிகழ்ச்சிகளை நடத்தி தேவையில்லாதவர்களை பேச வைப்பது. 

வேலையில்லாதவர்கள் தங்களுக்கு கிடைக்கும் மேடையை இப்படி முட்டாள்தனமான, தேவையில்லாத விசயங்களைப் பற்றி பேச பயன்படுத்தி கொள்கின்றனர். எது எப்படியோ நிச்சயம் நடிகர் சங்கமோ, வேறு எந்த சங்கமோ அந்த மனிதருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க போவதில்லை" என்று தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#nayanthara #Radharavi #vignesh sivan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story