தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என் மகளுடன் நானும் இறந்து விட்டேன்'.. உருக்கமாக அறிக்கை வெளியிட்ட விஜய் ஆண்டனி.!

என் மகளுடன் நானும் இறந்து விட்டேன்'.. உருக்கமாக அறிக்கை வெளியிட்ட விஜய் ஆண்டனி.!

Vijay Antony statement for daughter meera Advertisement

தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி. இவரது 16 வயது மகள் மீரா நேற்று முன்தினம் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

vijay antony

இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திரைத்துறையை கடந்து பொது மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் நல்ல மனிதரான விஜய் ஆண்டனிக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அன்பு நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் சென்று இருக்கிறாள். 

என்னிடம் பேசிக் கொண்டு தான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்து விட்டேன். நான் இப்போதே அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்" என தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay antony #Vijay Antony Daughter #meera #Vijay Anthony statement
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story