மகன் மட்டுமல்ல தளபதியின் மகளும் களத்தில் வெற்றிவாகை சூட துவங்கிவிட்டார்! உற்சாகத்தில் ரசிகர்கள்
Vijay daughter performing well in badminton
இளைய தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சில நாட்களாகவே செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறார். இதற்கு காரணம் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான குறும்படம் தான். மேலும் இவர் துப்பாக்கி-2 படத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் விஜய்யின் மகள் திவ்யா சாஷாவும் தற்பொழுது பிரபலமாக துவங்கியுள்ளார். ஆனால் இவர் அண்ணனை போல திரையில் இல்லை; மாறாக தரையில்.
சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் பயின்று வரும் திவ்யா ஒரு அவிட் பேட்மிட்டன் வீராங்கனையாகவும் ஜொலித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கூட மகள் விளையாடுவதை அமைதியாக அமர்ந்து விஜய் ரசிக்கும் புகைப்படங்கள் வைரலாகின.
இந்நிலையில் திவ்யா பயிலும் பள்ளியில் உள்ள பேட்மிட்டன் அணி சமீபத்தில் கலந்துகொண்ட தொடரில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இதில் சிறப்பு என்னவெனில் அந்த அணியில் தளபதியின் மகள் திவ்யாவும் இடம்பெற்றுள்ளது தான்.
அந்த தொடரின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பள்ளி நிர்வாகம் தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதில் வீராங்கனையாக திவ்யா கெத்தாக காட்சியளிக்கிறார்.