நடுரோட்டில் வெறித்தனமாக விஜய் ரசிகர்கள் செய்த காரியத்தை பாருங்க.! வைரலாகும் வீடியோ!!
vijay fans celebrating with banners

தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவருக்கென இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.மேலும் இவரது படம் வெளியாகும் நாட்கள் மற்றும் இவரது பிறந்தநாளை கோலாகலமாக திருவிழாவை போல கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து விஜய் 63 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படம் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் விஜய் 63 படத்தின் ஸ்பெஷல் தகவல்கள் வெளி வரலாம் எனவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மதுரையில் இருக்கும் விஜய் ரசிகர்கள் சமீபத்தில் நடுரோட்டில் விஜய்யின் பேனர்களை வைத்து பால் அபிஷேகம் செய்து கோசம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.