அடேங்கப்பா இவ்வளவு உயரமா? புது வருஷத்தை முன்னிட்டு விஜய் ரசிகர்களின் அசத்தலான செயல்!
vijay fans make 20 feet poster for new year
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் இளையதளபதி விஜய். இந்நிலையில் தற்போது விஜய் சர்க்கார் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
விஜய் தமிழகத்தில் நடக்கும் சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடியவர். மேலும் கஷ்டப்படும் மக்களுக்கு தானே முன்வந்து உதவ கூடியவர்.மேலும் சமீபத்தில் கஜா புயலின்போது கூட விஜய் நேரடியாக ரசிகர் மன்றங்களுக்கு பணம் அனுப்பி உதவி செய்தார் .
இவருக்கென இந்தியா முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.மேலும் விஜய் படம் வெளியாகும் அன்று ரசிகர்கள் போஸ்டர் பேனர் என திருவிழாவை போல் கொண்டாடுவார்கள்.
இந்நிலையில் தற்போது 2019 புது ஆண்டு துவங்கவுள்ள நிலையில் வீஜய் ரசிகர்கள் புதிய காலண்டர் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
அதில் 20 அடி உயரமுடைய விஜய்யின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.அதன் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.