×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகை குஷ்புவை தொடர்ந்து பாஜகவில் இணைகிறாரா தளபதியின் தந்தை.? அவரே அளித்த அதிரடி விளக்கம் !

பாஜக கட்சியில் இணையவிருப்பதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு நடிகர் விஜய்யின் அப்பா மறுப்பு தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய்யின் தந்தையும்,  இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் அவர்கள் விரைவில் பாஜக கட்சியில் சேரவிருப்பதாக தகவல்கள் பரவி வந்தநிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த சில காலங்களாகவே நடிகர் விஷால், கருணாஸ், நடிகை சுகன்யா, குஷ்பூ போன்ற  திரைப்பிரபலங்கள் சிலர் பாஜக கட்சியில் இணையவிருப்பதாக தகவல்கள் பரவி வந்தது. ஆனால் அதற்கு சிலர் மறுப்பு தெரிவித்தனர். 

மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த நடிகை குஷ்பூ  அதிலிருந்து விலகி நேற்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து விஜய்யின் தந்தையும் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல்கள் பரவி வந்தது.

ஆனால் அதற்கு எஸ்.ஏ. சந்திரசேகர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, நான் பாஜகவில் இணையவிருப்பதாக கூறப்படுவது முற்றிலும் தவறான தகவல்.இது மாதிரியான தகவல்களை யார்தான் பரப்புகிறார்கள் என தெரியவில்லை என்று கூறி  வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #sa chandrasekar #bjp
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story