தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இவர்தான்யா உண்மையான ஹீரோ!! விஜய் சேதுபதியை கொண்டாடும் ரசிகர்கள்.! எதனால் தெரியுமா?

vijay helped girl for recovery bondage

vijay-helped-girl-for-recovery-bondage Advertisement

பிரபல தனியார் தொலைக்காட்சியில,  சமூகத்திற்காக பலவிதமான நன்மைகளை செய்துவிட்டு வெளியே தெரியாமல் இருக்கும் பல நல்ல உள்ளங்களையும் கண்டுபிடித்து அவர்களை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் கடந்த மாதம் பச்சையம்மா என்ற இளம்பெண் கலந்து கொண்டார். அவர் பத்து வருடங்களாக கொத்தடிமையாக இருந்து தவித்துவந்துள்ளார். பின்னர் அதிகாரிகளுக்கு ரகசியமாக தகவலளித்து மீட்டெடுக்கப்பட்டார்.

vijay sethupathy

 அதனைத் தொடர்ந்து பச்சையம்மாள் தன்னைப் போல கொத்தடிமைகளாக இருக்கும் பலரையும் மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதை லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.

 பச்சையம்மாள் சமீபத்தில் விஜய் சேதுபதியின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது, அவரிடம்  விஜய் சேதுபதி நீங்கள் இந்த தொழிலை செய்ய உங்களுக்கு என்னென்ன தேவைப்படுகிறது என கேட்டுள்ளார்.


அதற்கு பச்சையம்மாள் தனியாக ஒரு ஆபீஸ் போட வேண்டும் என்றும், அங்கு டேபிள், சேர் மற்றும் கம்ப்யூட்டர் வேண்டும் பின்னர் கொத்தடிமைகளாக இருக்கும் மக்களை மீட்பதற்காக ஒரு கார் வேண்டும் என கூறியுள்ளார்.

இதனை கேட்டு நெகிழ்ந்து போன விஜய் சேதுபதி உடனே கம்ப்யூட்டர் மற்றும் ஆபீஸ் போடுறதுக்கு நானே பணம் தருகிறேன் என்று கூறி மேடையிலேயே 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பச்சையம்மாளிடம் வழங்கியுள்ளார். மேலும் உங்களுக்கு தேவையான காரையும் நானே வாங்கி தருகிறேன் என வாக்குறுதியும் அளித்தார்.

இந்நிலையில் தற்போது  தான் அளித்த வாக்கின்படி விஜய் சேதுபதி பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக சொகுசு கார் ஒன்றை வாங்கி அதனை கொத்தடிமை தொழிலாளர் மறுவாழ்வு சங்கத்திடம் வழங்கியுள்ளார்.இதனை அறிந்த ரசிகர்கள் விஜய் சேதுபதியை கொண்டாடி வருகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay sethupathy #car #bondage recovery
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story