கைதி படத்தை பார்த்தவுடன் தளபதி விஜய் செய்த காரியம்! உண்மையை போட்டுடைத்த பிரபல இயக்குனர்!
vijay hug logesh ganagaraj after seeing kaithi movie
தமிழ் சினிமாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் மிகவும் வித்தியாசமான கதைக்களத்துடன் தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த திரைப்படம் கைதி. இப்படத்தில் நரேன், தீனா, ஜார்ஜ் மரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, 100 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரும் சாதனை படைத்தது.
இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64வது படத்தில் நடிக்க உள்ளார். எக்ஸ் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு சிறந்த கதை மற்றும் திரைக்கதைக்கான விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய லோகேஷ் கனகராஜ் , விஜய் சார் கைதி படத்தை பார்த்துவிட்டு என்னை கட்டி அணைத்து பாராட்டினார். மேலும் அடுத்த 30 நிமிடம் வரை அவர் கைதிபடம் குறித்தே பேசினார். தளபதி 64 படத்தில் இதுவரை காணாத வித்தியாசமான விஜய்யை பார்க்கலாம் என கூறியுள்ளார்.