மீண்டும் அந்த இயக்குனரோடு இணையும் விஜய்.! அச்சோ என்ன நடக்க போகுதோ தெரியலையே.!
மீண்டும் அந்த இயக்குனரோடு இணையும் விஜய்.! அச்சோ என்ன நடக்க போகுதோ தெரியலையே.!
கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இந்த திரைப்படம் தனியாக வெளியிடப்பட்டிருந்தால் கூட அந்தளவிற்கு விமர்சனம் வந்திருக்காது. கே.ஜி.எப். 2 திரைப்படம் வெளியான அதே சமயத்தில் இந்த பீஸ்ட் திரைப்படம் வெளியானதால், சமூக வலைதளங்களில் இந்த திரைப்படத்தின் விமர்சனங்கள் அதிகரிக்க தொடங்கின.
அதே சமயம் விஜய் ரசிகர்கள் கூட இந்த திரைப்படத்தால் ஏமாற்றமடைந்தார்கள் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த திரைப்படம் நடிகர் விஜய்க்கு பிடித்திருந்ததாக அந்த திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் பல சமயங்களில் தெரிவித்துள்ளார். அதே போல மறுபடியும் இந்த கூட்டணி இணையப் போவதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.
பீஸ்ட் திரைப்படத்திற்கு பின்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் என்ற திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் நெல்சன், அடுத்தபடியாக யாருடன் இணையப் போகிறார்? என்று இதுவரையில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்த சூழ்நிலையில்தான் மறுபடியும் தளபதி விஜய் மற்றும் நெல்சன் கூட்டணி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள ஒரு திரைப்படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது. தற்போது தளபதி 68 திரைப்படத்தில் விஜய் பிஸியாக இருப்பதால், அந்த திரைப்படத்தை முடித்துவிட்டு விஜய் அடுத்த திரைப்படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகின்ற நிலையில், இதன் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.