பிரபல நடிகரின் படத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய்! யார் படம் தெரியுமா?
Vijay laughing after watching sj suriya movie tailor
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். சர்க்கார் படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் தற்போது மூன்றாவது முறையாக அட்லீயுடன் கூட்டணி சேர்ந்து அடுத்த படத்தில் நடித்து வருகிறார் விஜய். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
பொதுவாக தமிழ் சினிமாவின் மற்ற நடிகர்களின் படங்களையும் பார்க்கும் பழக்கம் விஜய்க்கு உண்டு. அந்த வகையில் நடிகர் தம்பி ராமையாவின் மகன் நடித்த படத்தை பார்த்துக் கூட அவரே போன் செய்து பாராட்டி இருந்தார்.
இந்நிலையில் நடிகர் SJ சூர்யா நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தில் நடித்துள்ளார். விஜய்யை வைத்து குஷி திரைப்படத்தை இயக்கியவர் SJ சூர்யா. இதில் சுவாரசியம் என்னவென்றால் எஸ் ஜே சூர்யாவின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ட்ரைலரை பார்த்து விழுந்து விழுந்து சிரித்துள்ளார் விஜய்.
மேலும், அதை எஸ் ஜே சூர்யாவிற்கு இரவு 11 மணிக்கு போன் செய்து கூறியுள்ளார். இந்த தகவலை எஸ் ஜே சூர்யா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.