வேற லெவல்.. லியோவில் டபுள் ஆக்ஷனில் மிரட்டுகிறாரா தளபதி விஜய்?? அவரது கேரக்டரின் பெயர் என்னனு தெரியுமா??
வேற லெவல்.. லியோவில் டபுள் ஆக்ஷனில் மிரட்டுகிறாரா தளபதி விஜய்?? அந்த கேரக்டரின் பெயர் என்னனு தெரியுமா??
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் லியோ. இதில் விஜய்க்கு ஜோடியாக 14 வருடங்களுக்கு பிறகு நடிகை திரிஷா நடிக்கிறார். மேலும் இதில் அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், சாண்டி, மன்சூர் அலி கான், கதிர் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.
லியோ படத்தின் முதல் கட்ட சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. அடுத்ததாக ஷூட்டிங் சென்னையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லியோ படம் குறித்த அப்டேட்டுகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் தற்போது லியோ படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி லியோ படத்தில் நடிகர் விஜய் டபுள் ஆக்ஷனில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், ஒரு கதாபாத்திரத்தின் பெயர் லியோ என்றும், மற்றொரு கதாபாத்திரத்தின் பெயர் பார்த்திபன் எனவும் கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்ன பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.