தமிழ் சினிமாவில் முதன்முறையாக விஜய் சேதுபதி எடுக்கும் புதிய அவதாரம்; ரசிகர்கள் உற்சாகம்.!
vijay sethupathi - new movie- story - screen story written
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தென் மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கியவர் நடிகர் விஜய்சேதுபதி.
தற்போது மாமனிதன், சிந்துபாத், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்துவருகிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சூப்பர் டீலக்ஸ் படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலானது. சூப்பர் டீலக்ஸ் படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்க, விஜய் சேதுபதி, சமந்தா, மிஸ்கின், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராத் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கு விஜய் சேதுபதி திரைக்கதை - வசனம் எழுதி இருக்கிறார். ஏற்கனவே தன்னுடைய தயாரிப்பில் தான் நடித்து வெளியான பஞ்சுமிட்டாய் படத்திற்கு வசனம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர், தயாரிப்பாளர், வசனகர்த்தாவாக அறிமுகமாகியுள்ள இவர் தற்போது திரைக்கதை ஆசிரியராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்கள்.