வெளியானது விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்; ரசிகர்கள் உற்சாகம்.!
vijay sethupathi - sangatamilan first look poster realease
தமிழ் சினிமாவில் குடும்பப் பின்னணி எதுவும் இல்லாமல் தனது நடிப்புத் திறமையால் முன்னணி நடிகராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. திரைத்துறையில் இதுவரை 25 படங்களைக் கடந்திருக்கும் விஜய் சேதுபதி வருடத்துக்கு 7 படங்கள் வரை நடித்திருக்கிறார்.
அந்தவகையில் சமீபத்தில் அவர் நடிப்பில் சீதக்காதி, செக்கச் சிவந்த வானம், பேட்ட, 96 போன்ற படங்கள் வெளியாகின. விஜய் சேதுபதி நடித்த 96 படம் ரசிகர்களால் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. தொடர்ந்து வரும் 16ம் தேதி சிந்துபாத் படம் வெளியாகவுள்ளது. இதில், விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், விஜய் சேதுபதி தனது 30ஆவது படமாக சங்கத்தமிழன் என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதியின் விஜயா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. வாலு மற்றும் ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கிய விஜய் சந்தர் இப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், ஜான் விஜய், சூரி, நாசர் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.