விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த நடிகையா இது! 5 வருடங்களுக்கு முன்பு இவ்வளவு குண்டாக இருந்தாரா!
Vijay sethupathi actress shrathasrinath
தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விக்ரம் வேதா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். அவர் நடித்த முதல் படமே ரசிகர்களிடம் அதிகபடியான வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதனை தொடர்ந்து நேர் கொண்ட பார்வை, K13, இவன் தந்திரன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் நடிப்பில் கன்னடத்தில் வெளியான யு டர்னில் என்ற திரைப்படம் பெரும் வெற்றி படமாக இவருக்கு அமைந்தது.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட போன்ற மொழிகளில் பல்வேறு படங்களை நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது 5 வருடங்களுக்கு முன்பு மிகவும் குண்டாக இருந்த ஷ்ரத்தா தற்போது 18 கிலோ எடை குறைத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் அதற்கு அவர் மேற்கொண்ட பயிற்சி பற்றி கூறியுள்ளார்.