அமீர்கான் படத்திலிருந்து திடீரென விலக இதுதான் காரணமா?? முதன்முதலாக உண்மையை உடைத்த நடிகர் விஜய்சேதுபதி!!
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே தனது திறமையால், தீராத முயற்சியால் முன்னேறி தற்போது மு
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே தனது திறமையால், தீராத முயற்சியால் முன்னேறி தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. இவர் எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் தயங்காமல் அதனை ஏற்று சிறப்பாக நடிப்பார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
ஹீரோவாக இருந்து பின்னர் வில்லனாக அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி ரஜினியின் பேட்ட மற்றும் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். மேலும் அவர் தெலுங்கிலும் உப்பென்னா என்ற படத்தில் வில்லனாக, அதுவும் ஹீரோயினுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஹாலிவுட்டில் பிரபலமான ஃபாரஸ்ட் கம்ப் என்ற திரைப்படம் தற்போது ஹிந்தியில் லால் சிங் சட்டா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஹீரோவாக அமீர்கான் நடிக்க, அவருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார். இந்த நிலையில் இப்படத்தில் அமீர்கானின் நண்பராக முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமான நிலையில் திடீரென அப்படத்திலிருந்து விலகினார். இந்நிலையில் விஜய் சேதுபதி உடல் எடை கூடியதால்தான் அப்படத்திலிருந்து விலக்கப்பட்டார் என தகவல்கள் பரவியது.
இதுகுறித்து விஜய்சேதுபதி சமீபத்தில் பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர், கொரோனா லாக்டவுன் காரணமாகத்தான் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. லாக்டவுனுக்கு பிறகு ஏராளமான படங்களில் நடிக்க வேண்டியிருந்ததால் அமீர்கான் படத்திற்கு சரியாக தேதி ஒதுக்க முடியவில்லை. இருப்பினும் விரைவில் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்