அட.. டிமாண்ட் கூடிக்கிட்டே போகுதே! மீண்டும் பிரபல முன்னணி நடிகருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி!! யாருக்கு தெரியுமா??
அட.. டிமாண்ட் கூடிக்கிட்டே போகுதே! மீண்டும் பிரபல முன்னணி நடிகருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி!!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கெட்டப்புகளில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக செம பிசியாக இருந்து வருபவர் விஜய் சேதுபதி. திரையுலகில் ஹீரோவாக அவதாரமெடுத்த அவர் குறுகிய காலத்திலேயே தனது கடின உழைப்பால் பெரும் பிரபலமானார்.
இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் அவர் வில்லனாகவும் அவதாரமெடுத்து பேட்ட, விக்ரம் வேதா, மாஸ்டர் போன்ற படங்களில் மிரட்டியிருந்தார். இந்த நிலையில் அவருக்கு தற்போது வில்லன் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. விஜய் சேதுபதி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்.
அதனை தொடர்ந்து அவர் நடிகர் கார்த்தி படத்தில் உருவாகும் புதிய படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கிய ராஜு மோகன் இயக்குகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.