இதுதான் விஜய்சேதுபதியின் அடுத்த பட தலைப்பா? கொண்டாடும் ரசிகர்கள்!!
vijay sethupathi next movie title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தென் மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கியவர் நடிகர் விஜய்சேதுபதி.
அதனை தொடர்ந்து பீட்சா, இதற்குதானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா, ரம்மி, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ,சூதுகவ்வும்,றெக்க,கவண், கருப்பன்,சேதுபதி, செக்க சிவந்த வானம், 96 என குறுகிய காலத்தில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
மேலும் திருநங்கையாக இவரது நடிப்பில் உருவாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மார்ச் 29-ந் தேதி திரைக்கு வருகிறது. இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி தற்போது வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.மேலும் இவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்கள்
இப்படத்தை விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்திற்கு சங்கத்தமிழன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.இதற்கு ரசிகர்கள் பலரும் உற்சாகத்துடன் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.