அஜித் பட்டதால் விஜய் சேதுபதிக்கு வந்த பிரச்சனை! சங்க தமிழன் வெளியாவதில் புது சிக்கல்.
Vijay sethupathi sanga thamilagan issue
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ள சங்க தமிழன் திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் மீது ஏற்பட்ட பிரச்சனையால் இன்று படம் வெளியாகாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்த படத்தை விஜயா ப்ரொடெக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். தயாரிப்பு நிறுவனமான விஜயா ப்ரொடெக்சன்ஸ் இதற்கு முன்னர் அஜித் நடித்த வீரம் படத்தை தயாரித்திருந்தது.
வீரம் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை விஜயா ப்ரொடெக்சன்ஸ் ஈடுகட்டவேண்டும் என விநோயோகஸ்தர்கள் கோரிக்கை வைத்துள்னனர். மேலும், விஜய் சேதுபதிக்கு தரவேண்டிய சம்பள பாக்கியை தருமாறும் கோரிக்கை எழுந்துள்ளது. இன்று மாலைக்குள் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டால் படம் நாளை வெளியாகலாம் என கூறப்படுகிறது.