அட.. இது சூப்பர் நியூஸாச்சே! வலிமை படத்தில் நடித்துள்ள பிரபல முன்னணி நடிகரின் மகன்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
அட.. இது சூப்பர் நியூஸாச்சே! வலிமை படத்தில் நடித்துள்ள பிரபல முன்னணி நடிகரின் மகன்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார் தற்போது போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் வலிமை திரைப்படத்தில் ஹுமா குரேஷி, யோகிபாபு, கார்த்திகேயா, சுமித்ரா, புகழ், சங்கீதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அதிரடி ஆக்ஷன் படமான வலிமை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளிலும்
பிப்ரவரி 24 ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக ரிலீசாகவுள்ளது.
இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், வலிமை படம் குறித்த பல அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் தற்போது பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் மகன் வலிமை படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவரின் கதாபாத்திரம் குறித்த எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. விஜய் சேதுபதியின் மகன் நானும் ரவுடி தான், சிந்துபாத் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.