தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாதவிடாய் புனிதமானது, சபரிமலை விவகாரத்தில் சர்ச்சையை கிளப்பிய பிரபல தமிழ் நடிகர்.!

vijay sethupathi talk about women pain

vijay-sethupathi-talk-about-women-pain Advertisement

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தென் மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கியவர் நடிகர் விஜய்சேதுபதி.

மேலும் இவரது பந்தா இல்லாத வெளிப்படையான, எளிமையான  நடத்தையாலும், இரக்க குணத்தாலும் இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில், கேரளாவில் மாமனிதன் படத்தின்  படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் விஜய்சேதுபதி சபரிமலை விவகாரம் தொடர்பாக சர்ச்சை கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

   vijay sethupathi

அதாவது சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட அனைத்துப் பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பிவருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 2 ந் தேதி கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து, மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் இன்றுவரை அது பெரும் பிரச்சினையாக உள்ளது.

இந்நிலையில் சபரிமலை விவகாரம் குறித்து விஜய்சேதுபதி கூறுகையில், ஒரு ஆணாக வாழ்க்கை நடத்துவது மிகச் சுலபம். ஆனால் பெண்களுக்கு அப்படி அல்ல. ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கினால் பெண்கள் வலி அனுபவிக்க வேண்டும். மாதவிலக்கு தூய்மையானதல்ல என்று யார் சொன்னது? உண்மையில் அது மிகவும் புனிதமானது. சபரிமலை பிரச்சினையில் நான் கேரள முதல்வர் பினராயி விஜயன் பக்கம் நிற்கிறேன் என கூறியுள்ளார்.

இவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay sethupathi #sabarimalai
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story