முதல்வர், துணை முதல்வருக்கு நேரடியாக கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி! என்ன கோரிக்கை தெரியுமா?
Vijay sethupathi talks in vikatan nambikai viruthukal 2018
ஒரு துணை நடிகராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்ளில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. சூப்பர் டீலக்ஸ், மாமனிதன், தெலுங்கு சினிமா, மலையாள சினிமா என பிஸியாக உள்ளார் விஜய் சேதுபதி.
இந்நிலையில் ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2018 விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகிவருகிறது.
சமூகம், இயல், இசை, இலக்கியம் என சாதித்த அனைவர்க்கும் விருது வழங்கி பெருமை படுத்திவருகிறது ஆனந்த விகடன். இந்த நிழச்சியில் சினிமாவையும் தாண்டி சமூக அக்கறை உள்ள மனிதனாக விஜய்சேதுபதி இருப்பதால் அவருக்கும் இந்த நம்பிக்கை விருதினை வழங்கியுள்ளது ஆனந்த விகடன்.
விருது வாங்கும்போது விஜய் சேதுபதியிடம் ஒருசில பிரபலங்களின் புகைப்படங்கள் காட்டப்பட்டு கேள்விகள் கேட்கப்பட்டன. அப்பொழுது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகைப்படமும், துணை முதல்வர் பன்னீர் செல்வம் புகைப்படமும் காட்டப்பட்டு, இதில் யார் முதல்வராக இருந்தால் நன்றாக இருக்கும் என கேட்க்கப்பட்டது.
அவர்களது புகைப்படத்தை பார்த்து சிரித்துவிட்டு, யார் முதல்வராக இருந்தாலும் பரவாயிலை, நான் தேனியில் இருந்து வந்துகொண்டிருந்தபோது ஆண்டிபட்டி அருகே மலைகள் குடையப்பட்டு வருவதை பார்த்தேன், மலைகள் இயற்கை நமக்கு கொடுத்த வரம், தயவு செய்து முதல்வர் அல்லது துணைமுதல்வர் முயற்சி செய்து மலைகள் குடையப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று நேரடியாக கோரிக்கை வைத்தார் விஜய் சேதுபதி.