×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விஜய்யின் GOAT படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் யுவன்.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

விஜய்யின் GOAT படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் யுவன்.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். தற்போதைய இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மேலும், இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, சினேகா, வைபவ், அரவிந்த், பிரேம்ஜி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படிப்பிடிப்பு சென்னை மற்றும் தாய்லாந்தில் நடைபெற்று வந்தது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்தப் படத்திற்கு GOAT என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் GOAT படத்தின் ஒரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் விஜய் தனது படங்களில் ஒரு பாடலை சொந்த குரலில் பாடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அவை பெரிய ஹிட்டாகி ரசிகர்கள் கொண்டாடும் பாடலாக மாறிவிடுகின்றன.

இந்த நிலையில்  GOAT படத்திலும் விஜய் ஒரு பாடியிருக்கிறார் என இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூறியுள்ளார். இதனையடுத்து அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #goat #yuvan shankar raja #venkat prabhu #ags entertainment
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story