விஜய் சேதுபதி மூலம் தமிழில் ஹீரோவாகும் விஜய் மகன்.! கனடாவில் படிக்கும் சஞ்சய்க்கு அடித்த அதிர்ஷ்டம்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
Vijay son jason sanjay in new movie
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இந்நிலையில், விஜய் சேதுபதி மூலம் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒருசில குறும்படங்களை இயக்கி அதில் நடித்தும் உள்ளார் சஞ்சய். தற்போது சினிமா மேற்படிப்பிற்காக கனடாவில் உள்ள அவர், விரைவில் திரைக்கு வர இருக்கும் உப்பெனா என்ற தெலுங்கு திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க ஏற்பாடுகள் நடந்துவருகிவதாக கூறப்படுகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஜய் சேதுபதி தமிழில் ரீமேக் செய்வதற்கான தயாரிப்பு உரிமையை வாங்கியுள்ளார். ஏற்கனவே, மாஸ்டர் பட ஷூட்டிங்கின்போது விஜய்சேதுபதி இந்த படம் குறித்து விஜய்யிடம் பேசியுள்ளதாகவும், விஜய் மகன் இந்த படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகாதநிலையியல், கொரோனா ஊரடங்கு முடிந்தபிறகு இதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.