இடியாப்ப சிக்கலில் சர்க்கார்! முருகதாஸ் மீது பழியை போட்ட விஜய்! என்னதான் நடக்குது?
Vijay statement about sarkar movie story theft
சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ளது சர்க்கார் திரைப்படம். கடந்த அக்டோபர் இரத்தம் தேதி சர்க்கார் திரைப்படத்தின் இசை வெளியிடப்பட்டது. இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசிய அரசியல் வசனங்கள்தான் தற்போது ஹாட் டாபிக்.
இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு சர்க்கார் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. படம் முழுவதும் அரசியல் பேசப்பட்டிருப்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது சர்க்கார் திரைப்படம். இந்நிலையில் சர்க்கார் படத்தின் கதை திருட்டு கதை என ஒருபுறம் பிரச்னை போய்க்கொண்டிருக்க வரும் தீபாவளிக்கு சர்க்கார் திரைப்படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
உதவி இயக்குனர் ஒருவர் தான் எழுதிய செங்கோல் என்னும் கதையை திருடி முருகதாஸ் சர்க்கார் படத்தை எடுத்துவருவதாக புகார் தெரிவித்தார். இதை விசாரித்த எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் இரண்டு கதைகளும் ஒன்றுபோல் இருப்பதால் பேசி முடிவு செய்துகொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.
சர்க்கார், செங்கோல் இரண்டு கதைகளும் ஒரே மாதிரியானது என்று கே.பாக்யராஜ் கொடுத்த கடிதத்தை, வருண் ராஜேந்திரன் ஏன் கடைசி நேரத்தில் வெளியிட வேண்டும் என்பதுதான் அக்டோபர் 27 வரைக்கும் கோடம்பாக்கத்தின் கேள்வியாக இருந்தது.
ஒருவழியாக விஷயம் விஜய் காதுக்கு சென்றுள்ளது. பாக்யராஜ் நடிகர் விஜயிடம் பேசியதற்கு ஒரு நடிகனாக நான் எனது படத்தில் நடித்து முடித்துவிட்டதாகவம், இந்தப் படத்தில் நடித்ததோடு என் வேலை முடிந்துவிட்டது. கதை பிரச்சினை என்பது இயக்குநர் எதிர்கொள்ள வேண்டியது. அதனால், நீங்கள் உங்கள் நடைமுறைப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைத் தவறாமல் செய்துவிடுங்கள். எனக்காக உங்கள் பதவியின் கடமையைக் கைகழுவ வேண்டாம்’ என்று விஜய் கூறியிருக்கிறார்.