அண்ணன்-தங்கை அட்ராசிட்டியில் பலரின் மனதை கவர்ந்த ஷிவாங்கி-குரேஷி.. குவியும் பாராட்டுக்கள்.!
அண்ணன்-தங்கை அட்ராசிட்டியில் பலரின் மனதை கவர்ந்த ஷிவாங்கி-குரேஷி.. குவியும் பாராட்டுக்கள்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, கொரோனா காலத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. கொரோனாவின் தாக்கத்தால் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட, வீட்டில் மனரீதியான அழுத்தத்தில் இருந்த பலருக்கும் விடுதலை கொடுத்தது அந்நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்துகொண்ட புகழ் கோமாளியாக இருந்தபோது, அவருக்கு மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அவர் அதற்கு செல்லாமல் கோமாளியாக தொடர்ந்தார். அப்போது, சக கோமாளியாக அறிமுகம் செய்யப்பட்ட ஷிவாங்கி - புகழ் செய்யும் அண்ணன் - தங்கை அட்ராசிட்டி சம்பவங்கள் பலரையும் மனம் விட்டு சிரிக்க வைத்தது.
தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 12 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது இறுதிக்கட்டம் நெருங்கி 5 போட்டியாளர்கள் எஞ்சி இருக்கின்றனர். நிகழ்ச்சியை ரக்சன் தொகுத்து வழங்குகிறார்.
இறுதி பட்டியலில் விசித்ரா, ஷிவாங்கி, மைம் கோபி, சிருஷ்டி டாங்கே, டி.அர்.கே கிரண் ஆகியோர் இருக்கின்றனர். கோமாளிகளாக புகழ், சுனிதா, ஜி.பி முது, குரேஷி, மோனிஷா, டைகர் தங்கதுரை, சிங்கப்பூர் தீபன், ரவீனா, சில்மிஷம் சிவா, ஓட்டேரி சிவா, மணிமேகலை, சரத், பரத், சக்தி, வினோத் ஆகியோர் கலக்கி இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தற்போது ஷிவாங்கி - குரேஷி இடையே அண்ணன் - தங்கை பாசப்பிணைப்பு நெருக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், பலரும் அதனை மனதார பாராட்டி ஷிவானியின் குழந்தைத்தனமான செயல்பாடுகளை எண்ணி மனரீதியாக மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.