பிக்பாஸ் சீசன்-3ல் முதல் நபராக விஜய் டிவி தொகுப்பாளினியா? வைரலாகும் புகைப்படம்.!
vijay tv - bigg boss seasen3 - anger briyanka vairal photo
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் கேமராக்கள் முழுவதும் பொருத்தப்பட்ட ஒரே வீட்டிற்குள் 100 நாட்கள், 16 பிரபலங்கள் தொலைக்காட்சி, மொபைல் போன்ற வெளி உலக தொடர்பும் இல்லாமல் இருக்க வேண்டும் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே முதல் இரண்டு சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது மூன்றாவது சீசன் தொடங்குவதற்காகன பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. .இந்த நிகழ்ச்சியையும் நடிகர் கமலே தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் மிர்னாலினி, சாந்தினி,கஸ்தூரி,விசித்ரா,தொகுப்பாளினி ரம்யா,பூனம் பாஜ்வா,
ரமேஷ் திலக்,சரண் ஷக்தி, பாலாஜி முருகதாஸ்,ஜாங்கிரி மதுமிதா,கிரிஷ்
ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியானது ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவுப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியான பணியாற்றி வரும் பிரியங்கா, பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தொகுப்பாளினி பிரியங்கா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரும் இருக்கையில் அமர்வது போன்று காணப்படுகிறார். இதை வைத்தே பலவாறு செய்திகள் உலா வருகின்றன. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.