விஜய் டீவியை விட்டு வெளியேறிய முக்கிய பிரபலம்! என்ன காரணம் தெரியுமா?
Vijay tv amit leaving from nenjam marapathilai serial
தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஓன்று விஜய் தொலைக்காட்சி. புது புது நிகழ்ச்சிகள், புது புது படங்கள் என ரசிகர்களை தன் பக்கம் இழுப்பதில் விஜய் தொலைக்காட்சி மற்ற தொலைக்காட்சிகளுக்கு முன்னோடி என்றே சொல்லலாம்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் பிரபலமானவை. சூப்பர் சிங்கர், பிக் பாஸ், கலக்க போவது யாரு என பல்வேறு நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமானவை.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நெஞ்சம் மறப்பதில்லை என்று தொடர் மக்கள் மத்தியில் பிரபலமானது. இது நாயகனாக அமித் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்து பிரபலமானவர். தற்போது நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் நடித்து வருகிறார் அமித்.
இந்நிலையில் நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் இருந்து தாம் விளக்கப்போவதாக அறிவித்துள்ளார் அமித். தனது வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு போவதாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.