விஜய்டிவி புகழ் ரியோ நடிப்பில் வெளியான 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா' ட்ரெய்லர்.!
vijay tv anger - riyo - nengam undu nermai undu oduraja - trailer
சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஆரம்பத்தில் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பணிபுரிந்தார் ரியோ. பிறகு விஜய் Tv யில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த சரவணன் மீனாட்சி தொடரில் இறுதியில் மீனாட்சிக்கு ஜோடியாக நடித்தார். இந்த நிகழ்ச்சி மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
அதன் பிறகு விஜய் டிவியிலேயே பல காமெடி ஷோக்களை நடத்தி மிகவும் பிரபலமடைந்தார். தற்போது, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கனா படத்திற்கு பிறகு தயாரிக்கும் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற புதிய படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
பிளாக் ஷீப் யூடியூப் புகழ் கார்த்திக் வேணுகோபாலன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ரியோவுக்கு ஜோடியாக ஷெரில் என்கிற புதுமுக நாயகி தமிழில் அறிமுகமாகியுள்ளார். தவிர, நாஞ்சில் சம்பத், காமெடி ரோலில் ஆர்.ஜே.விக்னேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.