விஜய் டீவியில் இருந்து அதிரடியாக வெளியேறிய இரண்டு பிரபலங்கள்! அதிர்ச்சியில் ரசிகர்கள்.
Vijay tv ayutha ezuthu serial cast changed
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அணைத்து நிச்சிகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. அந்த வகையில் சில மாதங்களாக ஒளிபரப்பாகிவரும் ஆயுத எழுத்து சீரியல் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த தொடரின் நாயகியாக இந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீத்து நடித்துவந்தார். நாயகனாக சக்திவேல் என்ற கதாபாத்திரத்தில் அம்சத் கான் நடித்துவந்தார். விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த இந்த தொடரில் தற்போது கதாநாயகன், கதாநாயகி இருவரும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்க்குமுன் நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் அறிமுகமாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற சரண்யா தற்போது இந்திரா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ஆனந்த் என்பவர் சக்திவேல் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த இரண்டு கதாபாத்திரங்களும் திடீரென மாற்றப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.