என்னடா நடக்குது இங்க?.. உடைந்துபோன பாக்யாவுக்கு ஆறுதல் கூறும் கோபி; ராதிகா கண்முன் சுவாரஸ்யம்.!
Baakiyalakshmi Promo: உடைந்துபோன பாக்கியாவுக்கு ஆறுதல் கூறி மனதை தேற்றும் கோபி; மனைவி கண்முன் சுவாரஷ்யம்.!
விஜய் தொலைகாட்சியில் கடந்த 27 ஜூலை 2020 முதல் ஒளிபரப்பு செய்யப்படும் நெடுந்தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடர் 1000 நாட்களை கடந்து தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
பாக்கியலட்சுமி நெடுந்தொடரில் ரேஷ்மா, கே.எஸ் சுசித்ரா, வி.ஜே விஷால், சதிஷ் குமார், திவ்யா கணேஷ், நேஹா மேனன் உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
தற்போது தொடரில் கோபி - பாக்கியா தம்பதி பிரிவு என்பது தமிழக ரசிகர்களிடையே பெருவாரியாக வரவேற்கப்பட்டு, அதனைத்தொர்ந்த அவரின் சாதனைகள் கொண்டாடப்பட்டன.
இந்நிலையில், தம்பதிகளின் மகன்கள் எழில் மற்றும் செழியனின் வாழ்க்கை கேள்விக்குறியாகி நிற்கிறது. இதனால் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுதிரண்டு, இப்பிரச்சினைகளை சரி செய்யும் முனைப்புடன் இருக்கின்றனர்.
கடந்த வாரம் கோபி செய்த உதவியால் மனம் மகிழ்ந்துபோன பாக்கியலட்சுமி, கோபிக்கு தனது நன்றியை தெரிவித்தார். கோபியும் பாக்யலட்சுமிக்கு தைரியம் ஏற்படுத்தும் வகையில் பேசுகிறார். நடுவில் இதனை மகிழ்ச்சியோடு ரேஷ்மா நின்று வேடிக்கை பார்க்கிறார்.
கிட்டத்தட்ட பல மாதங்கள் கழித்து இருவரும் அமைதியாக பேசும் காணொளி (Baakyalakshmi Promo) வெளியாகியுள்ளது ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலவையான விமர்சனத்தையும் பெறுகிறது.