ஆதாம்ன்னா யாரு?? கமலையே திக்குமுக்காடவைத்த ஜி.பி முத்து.. பிக் பாஸ் அலப்பறைகள் ஸ்டார்ட்ஸ்..!
ஆதாம்ன்னா யாரு?? கமலையே திக்குமுக்காடவைத்த ஜி.பி முத்து.. பிக் பாஸ் அலப்பறைகள் ஸ்டார்ட்ஸ்..!
தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த சீசனில் தனலட்சுமி, நிவா, குயின்சி, விஜே கதிர்ராவன், மணி சந்திரா, மகேஸ்வரி, அமுதவாணன், விக்ரமன், ஷாந்தி, ஜனனி, ஏடிகே, ஷெரின், ரக்ஷிதா மகாலட்சுமி, அசல், ராபர்ட் மாஸ்டர், ராம் ராமசாமி, மணிகண்ட ராஜேஷ், ஆயிஷா, ஷிவின் கணேசன், அஷீம், ஜிபி முத்து ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சி அக். 9 ம் தேதியான நேற்று தொடங்கியது. பிக் பாஸ் இல்லத்திற்குள் நுழைந்த போட்டியாளர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்ற எண்ணம் பலரும் எழத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில், நேற்று போட்டியின் தொடக்கத்தின் போது, முதல் நபராக பிக் பாஸ் இல்லத்திற்குள் ஜி.பி முத்து அனுப்பி வைக்கப்பட்டார். அவர் வீட்டிற்குள் பயத்துடன் இருந்தது போன்று பேசியதால், தொகுப்பாளர் கமல் ஹாசன் அவருடன் உரையாடினார்.
அந்த சமயத்தில், ஜிபி முத்துவிடம் ஆதாம் ஏவாள் கதையை கூறி, அவர் முதலில் சென்றதால் பயம் கொள்ள வேண்டாம் என்று புரியவைக்க நினைத்தார். ஆனால், ஆதாம்-ஏவாள் தொடர்பாக எந்த வித கதையையும் அறியாத அந்த குழந்தை உள்ளமோ ஆதாமா? என்று கமல் ஹாசனை நோக்கி கேள்வி எழுப்பி அவரையே திக்குமுக்காட வைத்தது.