அட பாவமே!! இவரா?? பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல சீரியல் நடிகரான குட்டி ரமேஷ் தற்போது மரணம் அடைந்துள்ளார். சன்.டிவி, விஜய் டிவி உள்ளி
பிரபல சீரியல் நடிகரான குட்டி ரமேஷ் உயிரிழந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்துவரும் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் மற்றும் இயக்குனர் KV ஆனந்த் என மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பலர் சமீபத்தில் உயிரிழந்தனர்.
இந்நிலையில் பிரபல சீரியல் நடிகரான குட்டி ரமேஷ் தற்போது மரணம் அடைந்துள்ளார். சன்.டிவி, விஜய் டிவி உள்ளிட்ட பிரபலமான சேனல்களில் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார் குட்டி ரமேஷ். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தேன்மொழி BA ஊராட்சிமன்ற தலைவர் என்ற தொடரில் நாயகியின் தந்தையாக நடித்துவந்தார்.
தற்போது நடிகர் குட்டி ரமேஷ் மரணம் அடைந்துள்ள செய்தியை விஜய் டிவி தமது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளது. நடிகர் குட்டி ரமேஷின் மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.