2வது திருமணம் செய்துகொண்ட நந்தினி மைனா! அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ!
Vijay tv nandhini mayna second marriage photos goes viral
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகை நந்தினி மைனா. சரவணன் மீனாட்சி தொடரில் கதாநாயகிக்கு தோழியாக, மிகவும் ஜாலியாக நடித்த இவரது மைனா என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இவரையும் பிரபலமாக்கியது.
இந்நிலையில் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, சண்டை காரணமாக சில வருடங்களுக்கு முன்னர் இவரது கணவர் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டார். கணவர் இறந்த பிறகு சிலகாலம் நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் சீரியல், சினிமாவில் தலைகாட்ட தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் நந்தினி மைனா. இந்நிலையில் பிரபல சீரியல் நடிகர் ஒருவரை மைனா திருமணம் செய்துகொள்ளப்போவதாக செய்திகள் வெளிவந்தநிலையில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது தற்போது அவர்கள் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
இருவரது திருமணமும் நடந்து முடிந்த நிலையில் அழகிய ஜோடியின் திருமண புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.