வித விதமாக போஸ் கொடுத்த விஜய் டிவி மீனாட்சி.. எக்குத்தப்பா கலாய்க்கும் ரசிகர்கள்..!
விஜய் டிவி புகழ் நடிகை ரச்சிதா மகாலட்சுமி வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் க
விஜய் டிவி புகழ் நடிகை ரச்சிதா மகாலட்சுமி வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கலாய்த்துவருகின்றார்.
சின்னத்திரை சீரியல் நடிகைகள் மத்தியில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகைகளில் ஒருவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் நடிப்பில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது.
சரவணன் மீனாட்சி தொடர் முடிவடைந்த பிறகு ஜீ தமிழ் பக்கம் சென்ற இவர், தற்போது மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் நடித்துவருகிறார். சீரியல் மட்டும் இல்லாமல் ஒருசில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் ரச்சிதா மகாலட்சுமி. என்னதான் சீரியல், சினிமா என பிசியாக இருந்தாலும், அம்மணி சமூக வலைத்தளங்களில் அதைவிட பயங்கர பிசியாக இருந்துவருகிறார்.
எப்போதும் தனது புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கிவரும் இவர், சமீபத்தில் கண்ணாடி அணிந்து, வித விதமா முக பாவனைகள் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்பட தொகுப்பு ஒன்று ரசிகர்கள் மத்தியில் எதிர்மறை கருத்துக்களை பெற்றுவருகிறது.
அவரது புகைப்படத்தை பார்க்கும் பலரும், நாங்க கூட மியா கலிஃபா-ன்னு நெனச்சிட்டோம் என எக்குதப்பான கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.