விஜய் டிவிக்கு வருவதற்கு முன் ராமர் என்ன வேலை செய்தாராம் தெரியுமா? இதோ!
Vijay tv ramar previous job
விஜய் தொலைக்காட்சி எத்தனையோ திறமைசாலிகளை அடையாளம் கண்டு அவர்களை பெருமைப்படுத்தியுள்ளது. சிவர்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் இப்படி தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் பல்வேறு நடிகர்கள் விஜய் தொலைக்காட்சி மூலம் அறிமுகமானவர்களே.
தற்போது இவர்கள் வரிசையில் ராமரும் இணைந்துள்ளார். என்னமா இப்படி பன்றிங்களேமா!, ஆத்தாடி என்ன உடம்பி என இவரது நகைச்சுவை பலரது மனதை கவர்ந்து இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. இவருக்காகவே சகல vs ரகள, ராமர் வீடு என புது புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது விஜய் தொலைக்காட்சி.
சின்னத்திரையில் பேரும் புகழோடும் இருக்கும் ராமர் தற்போது வெள்ளித்திரையில் நடிக்க தொடங்கியுள்ளார். அடுத்ததாக, சஞ்சனா கலராணியுடன் இணைந்து ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடிக்க உள்ளார் நம்ம ராமர்.
இப்படி நகைச்சுவைக்கு பெயர் போன ராமர் நடிக்க வருவதற்கு முன் என்ன வேலை செய்தார் என்ற தகவல் தற்போது வைரலாகிவருகிறது. சிறுவயதில் இருந்தே படிப்பு மீது ராமருக்கு அதிக ஆர்வம் உண்டாம். படித்து முடித்த பிறகு இவரது மாமாவுடன் சேர்ந்து ஆர்.டி.ஓ ஆபீஸில் தற்காலிக வேலை செய்து வந்திருக்கிறார்.
ஆர்.டி.ஓ ஆபீஸில் வேலை பார்த்துக்கொண்டே கிடைக்கும் நேரங்களில் நாடகம், சின்ன சின்ன நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்துகொண்டு இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார் ராமர்.