"படுபயங்கர கவர்ச்சியில் குக் வித் கோமாளி சுனிதா!" வைரலாகும் போட்டோஸ்!
படுபயங்கர கவர்ச்சியில் குக் வித் கோமாளி சுனிதா! வைரலாகும் போட்டோஸ்!
விஜய் டிவியின் "ஜோடி நம்பர்1 சீசன் 4" நிகழ்ச்சியில் தான் முதன் முதலில் பங்கேற்றார் சுனிதா. அதன்பின்னர் குக் வித் கோமாளி சீசன் 2, சிங்கிள் பொண்ணுங்க உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். மேலும் காமெடி ராஜா மற்றும் கலக்கல் ராணி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரானார் சுனிதா.
நடனத்தில் ஆர்வம் மிகுந்த சுனிதா, தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் மக்களின் மனம் கவர்ந்தவரானார். தொடர்ந்து 2012ம் ஆண்டு தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த "3" திரைப்படத்தில் ஸ்ருதியின் தோழியாக நடித்திருந்தார். மேலும் சுனிதா எக்ஸ்பிரஸ் என்ற யூட்யூப் சேனலையும் நடத்தி வருகிறார்.
தற்போது சுனிதா ரஞ்சித் இயக்கும் "Flakka" என்ற லெஸ்பியன் கான்செப்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வரும் சுனிதா, தற்போது ஒரு போட்டோஷூட்டை நடத்தியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பயங்கர வரவேற்பு பெற்றுள்ள அந்தப் புகைப்படங்களில் படுபயங்கர கவர்ச்சியில் தனது மொத்த பேஸ்கட்டையும் மாற்றியுள்ளார் சுனிதா. இதை பார்த்த ரசிகர்கள் "பட வாய்ப்புக்காக தான் இப்படி கவர்ச்சியில் இறங்கியுள்ளார்" என்று கூறி வருகின்றனர்.