ஓட்டு போட்ட கையோடு, வெளிநாட்டிற்கு பறந்த தளபதி விஜய்! ஓ..இதுதான் காரணமா? டிரெண்டாகும் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் விஜய் மாஸ்டர் த
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் விஜய் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 65வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். இதற்கிடையில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் வீட்டிலிருந்து சைக்கிளில் வந்து வாக்களித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி நேற்று முழுவதும் பெருமளவில் டிரெண்டானது.
அதனைத் தொடர்ந்து ஓட்டு போட்ட கையோடு விஜய் தளபதி 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா பறந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு ஜார்ஜியா செல்வதற்காக விஜய் சென்னை விமான நிலையத்திற்கு வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.