விஜயகாந்த் நடித்த கள்ளழகர் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான வில்லன் நடிகருக்கு ஐ.நாவின் விருது.! பாராட்டித்தள்ளிய விஜயகாந்த்.!
vijayakanth apriciate soonu sood
தமிழ்சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற கள்ளழகர், கோவில்பட்டி வீரலெட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார் நடிகர் சோனு சூட். இவர் திரையுலகில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் இவர் நல்ல உள்ளம் படைத்த ஹீரோவாவார்.
கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் முதல் வேலையில்லாத தொழிலாளர்கள் வரை அனைவருக்கும் உதவி செய்து மக்கள் மனதில் ஹீரோவாகியுள்ளார் வில்லன் நடிகர் சோனு சூட். கொரோனா சமயத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக தனது சொந்த செலவில் நூற்றுக்கணக்கான பஸ்களை ஏற்பாடு செய்து அவர்களது ஊருக்கு அனுப்பி வைத்தார்.
வெளிநாட்டில் தவித்த மாணவர்களை தனி விமானத்தின் மூலம் தாய்நாட்டிற்கு அழைத்து வந்தது உள்ளிட்ட ஏராளமான உதவிகளை செய்து வந்தார். இவரின் இந்த மனித நேய செயல்களை அறிந்த ஐக்கிய நாடுகள் சபை இவருக்கு விருதினை வழங்கி சிறப்பித்துள்ளது. ஐ.நா., மேம்பாட்டு திட்டத்தின் 'சிறப்பு மனிதநேய விருது' அவருக்கு வழங்கப்பட்டது. கடந்த 28ம் தேதி அவர் இந்த விருதினை பெற்றுக் கொண்டார்.
கேப்டன் விஜயகாந்த் நடித்த கள்ளழகர் படத்தில்தான் முதன் முறையாக சோனு சூட் நடிகராக அறிமுகமானார். இதனையடுத்து தான் பல மொழி படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் சோனு சூட். இந்தநிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் சோனு சூட்டை பாராட்டி தனது ட்விட்டர் பதிவில் பாராட்டு தெரிவித்துள்ளார். அதில், ”ஐ.நாவின் சிறப்பு மனிதநேய செயலுக்கான விருதைப் பெற்றுள்ள சோனு சூட்டிற்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.