அழகில் டாப் நடிகைகளையே தூக்கி சாப்பிடும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி!! வைரல் புகைப்படம்..
அழகில் டாப் நடிகைகளையே தூக்கி சாப்பிடும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி!! வைரல் புகைப்படம்..
அனிதா விஜயகுமாரின் மகள் தியாவின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
தமிழசினிமாவில் மிகவும் பிரபலமான சினிமா குடும்பம் என்றால் அதில் நடிகர் விஜயகுமாரின் குடும்பமும் ஒன்று. சிவகுமார் தொடங்கி அவரது மனைவி மகன், மகள்கள் என அனைவரும் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர்கள். பல்வேறு வெற்றி படங்களை இந்த குடும்பத்தினர் கொடுத்துள்ளனர்.
அருண் விஜய் தொடர்ந்து சினிமாவில் நடித்துவந்தாலும், அவரது சகோதரிகள் திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டனர். வனிதா மட்டும் அவ்வப்போது சர்ச்சைகள், சண்டைகள் என ட்ரெண்டிங்கில் இருந்துவருகிறார். மற்ற சகோதரிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர்.
இந்நிலையில் விஜயகுமாரின் மகளும் நடிகர் அருண் விஜய்யின் சகோதரியுமான அனிதா விஜயகுமாரின் மகள் தியாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அனிதா விஜயகுமார் திரைப்படங்களில் நடித்ததில்லை என்றாலும், அவரது மகள் சினிமா ஹீரோயின் போல் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.