சிகிச்சை முடியவில்லை! மருத்துவமனையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேத்திடாங்க! கதறி அழுத நடிகை விஜயலட்சுமி!
Vijayalakshmi leaving from hospital before finishing treatment
தமிழ், சினிமாவில் பிரண்ட்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. அவர் கடந்த சில மாதங்களாகவே சீமான் குறித்து ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். மேலும் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டதாகவும் கூறிவந்தார். இந்த நிலையில் அவரது ஆதரவாளர்கள் நடிகை விஜயலட்சுமிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். மேலும் பல மிரட்டலான வீடியோக்களும் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயலட்சுமி அதிக அளவிலான இரத்த கொதிப்பு மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்தார். அதனை தொடர்ந்து அவர் குடும்பத்தினரால் மீட்கப்பட்டு சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அதனைத்தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவரிடம் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றனர். பின்னர் வழக்குபதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தன்னை வலுக்கட்டாயமாக மருத்துவமனையிலிருந்து வெளியேற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அழுதவாறு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, எனக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்துகொண்டிருந்த நிலையில், திடீரென ஒரு மணிநேரத்தில் வலுக்கட்டாயமாக என்னை அங்கிருந்து வெளியேற்றிவிட்டனர். மூச்சுவிட சிரமப் பட்ட நிலையிலும், சிகிச்சை முடியாதபோதும் என்னை வெளியேற்றி விட்டனர். அதற்கான காரணம் எனக்கு புரியவில்லை. அவர்கள் செய்யும் அக்கிரமங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
நான் எந்த நாடகமும் போடவில்லை. எனக்கு பின்பு எந்த அரசியலும் கிடையாது.காயத்ரி ரகுராம் என்னை கேட்காமல் என் அனுமதி இல்லாமல் என்னை டிஸ்சார்ஜ் செய்து விட்டார். எனக்கு எதிராக பெரும் கூட்டமே உள்ளது. நான் உண்ணாவிரதம் இருக்க தயார். எனக்கு பின்னால் என்ன நடக்கிறது. என்னை ஏன் நிம்மதியாக வாழ விடமாட்டேங்கிறாங்கனு எனக்கு தெரிய வேண்டும் என அழுதுள்ளார்.